நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவு காரணமாக காலை 10:30 மணி அளவில் காலமானார். தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர் காமெடி நடிகர் கவுண்டமணி. 80 – 90 களில் நகைச் சுவை என்றாலே அனைவரின்நினைவுக்கும் வருவது கவுண்டமணி செந்தில் தான். அந்தகாலத்தில் செந்திலுடன், கவுண்டமணி கொடுத்த காமெடி காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இதுவரை எந்த காமெடியும் வரவில்லை என்று கூறலாம். இவர்களின் வாழைப்பழ காமெடி இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 1970-ம் ஆண்டு வெளியான ‘ராமன் எந்தன் ராமனடி’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகராக நுழைந்தார். 1971-ம் ஆண்டு வெளியான ‘தேனும் பாலும்’ படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படத்தின் மூலம் தான் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுக மாகியுள்ளார். இதன்பின் படங்களில் நடிக்க தொடங்கிய கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவை தனது காமெடியால் ஆட்சி செய்து வந்தார்.நடிகர் கவுண்டமணி 1963-ம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி,சுமித்ரா என 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) இன்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள் பலர்,கவுண்ட மணியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
Read More
05-05-2025 04:00 PM
Share
கள்ளக்குறிச்சி கார் விபத்து குறித்து போலீசார் அளித்த விளக்கம் முன்னுக்குபின் முரணாக உள்ளதாக மதுரை ஆதீனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்து தொடர்பாக தன்னை கொல்ல பாகிஸ்தான் சதி செய்வதாக மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மதுரை ஆதீனம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டனர். அதில், உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் ஏற்பட்ட விபத்திற்கு மதுரை ஆதீனம் சென்று கார் அதிவேக மாக சென்றதே காரணம் என்றும், இதில் கொலை முயற்சிக் கான முகாந்திரம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்து உண்மை இல்லை என்ற ரீதியில் போலீசார் விளக்கம் அளித்திருந்தனர்.இந்நிலை யில், மதுரை ஆதீனம் இன்று போலீசாரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"கடந்த மே 2ஆம் தேதி அன்று காலை உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் நடந்த கார் விபத்து சம்பவம் தொடர்பான போலீசாரின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம். கார் விபத்து தொடர் பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப் படுத்தவில்லை என போலீஸ் அறிக்கையில் பார்த்தோம். சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே சரியாக காலை 09.42 மணிக்கு காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்து உடனடியாக தகவலை பரிமாறிவிட்டோம். அதன் பிறகு காலை 10.09-க்கு உளவு பிரிவு அதிகாரிக்கு தகவலை தெரிவித்தும், காலை 11.47 மணிக்கு உளுந்தூர் பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் பேசியும், இந்த சம்பவம் தொடர்பாக பலமுறை உள்ளூர் போலீஸ் அதிகாரி யிடம் பேசிக்கொண்டும் இருந்தோம். மாலை 5.39 மணிக்கு உளவுத்துறை டி .எஸ்.பி எங்களை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். நாங்கள் சென்ற சாலையில் எந்தவித தடுப்புகளும் இன்றி சாலை சீராக இருந்தது. சேலம் -சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தும் கூட மிக வேகமாக வந்து எங்களுடைய வாகனத்தில் மாருதி சுசுகி வாகன மோதியது. சம்பவஇடத்தில் நாங்கள் பார்க்கும் பொழுது எதிரில் வந்த வாகனத்திற்கு பதிவு எண் போர்ட் இல்லை, 2 இஸ்லாமியர்கள் மட்டும் வாகனத்தில் இருந்தனர்.போலீசாரை தொடர்பு கொண்டு இருக்கிறோம் என்று அவர்களிடம் தெரியப்படுத்திய உடன் உடனடியாக சம்பவஇடத்தை விட்டு அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.
சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்து எந்தவித தகவலையும் காவல் துறை தெரிவிக்காததால் எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்தது. மாநாட்டு மேடையில் மதுரை ஆதீனம் குரு மகா சந்நிதானம், இது சதியாக இருக்கும் என்று பேசிய உடனே மிகப்பெரிய பரபரப்பாக பேசப்பட்டது. இச்சம்பவம் தொடர் பான உண்மைத்தன்மை அறிக்கையை காவல்துறை மே 3ஆம் தேதி அன்று இரவு வெளியிட்டது. எங்களை பற்றியும் எங்கள் தரப்பு வாகனத்தைப் பற்றியும் முழு விவரங்களை தெளிவாக போலீஸ் துறை அறிவித்தது. எதிர்த்தரப்பு வாகனத்தை பற்றியும், அவருடைய விவரங்கள் பற்றியும், தடுப்புகளைத் தாண்டி அவர்கள் மோதியதை பற்றியும், பதிவு எண் பொருத் தப்படாத வாகனமாக நாங்கள் குற்றம் சாட்டியதை பற்றியும் ஒரு இடத்தில் கூட போலீசார் பதிவு செய்யப்படாது வருத்தம் அளிக்கிறது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து எங்களிடம் அளித்த நகலை பார்த்தோம்.மே 2 நடந்த விபத்திற்கு மே 4ஆம் தேதி அன்று அப்துல்லா மகன் முபாரக் அலி என்பவர் புகார் அளித்ததாகவும் அதன் அடிப்படையில் இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அறிந்தோம். அவசர அழைப்பு 100-க்கு போன் செய்து முறையாக முதலில் பதிவு செய்தது நாங்கள் தான். ஆனால் போலீசாரிடம் எந்தவித புகார் மதுரை ஆதீனம் சார்பாக பெறப்படவில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.15க்கும் மேற்பட்டமுறை போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி இது பற்றிய விளக்கங்களைக் கேட்டு அறிந்தும் கூட முழு தவறு மதுரை ஆதீனம் பக்கம் தான் இருக்கிறது என்பது போல தோற்றம் உருவாகி உள்ளது வேதனை அளிக்கிறது. அந்த மாருதி சுசுகி வாகனத்தில் இருவர் மட்டுமே பிரயாணம் செய்து வந்தார்கள். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் குடும்பத்துடன் சென்றோம் என்ற தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் பக்கவாட் டில் வேகமாக வந்து மோதியதை மறைக்கும் விதமாக சீராக இருந்த சாலையில் பயணித்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. விபத்து நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையிடம் முறையாக தகவல் தெரிவித்து தொடர்ந்து அதைப்பற்றி விவரத்தை தெரிந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தோம்.போலீசார் எதிர்தரப்பினர் பற்றி விவரத்தை தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதை மறுத்து வந்தது சந்தேகத்துக்கிடமானது. மீண்டும் எதிர் தரப்பில் இருவர் மட்டும் பயணித்து வந்த வாகனத்தில் குடும்பத்தோடு பயணம் செய்து வந்த வாகனம் என்று சொல்லி இருப்பது மேலும் வேதனை அளிக்கிறது. முன்னுக்கு பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More
05-05-2025 03:53 PM
Share